யோகா என்றால் என்ன ?

யோகா என்றால் என்ன ?

யோகா என்பது சரியான வாழ்க்கைக்கான அறிவியல். இது உடல், உயிர், உளவியல், உணர்ச்சி, அறிவு மற்றும் ஆன்மீக அம்சங்களிலும் செயல்படுகிறது.

யோகா, மன, உடல் நிலைகளுக்கு இடையே உள்ள தொடர்பை வளர்த்துக் கொள்வதுடன், இவற்றில் ஏதேனும் ஒரு குறைபாடு மற்றவர்களுக்கு எவ்வாறு இடையூறு செய்கிறது என்பதையும் கற்றுக்கொள்ள உதவும்

யோகம் என்ற சொல்லுக்கு ஒருமுகப்படுத்துதல் என்று பொருள். மன அலைகளை ஒருமைப்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்கு யோகம் என்று பெயர். யோகத்தை பலரும் பலவிதமாக தன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.  

யோகா வகைகள்:

யோகம் பல பிரிவுகள் உள்ளன: ராஜா, ஹத, ஞானம், கர்மா, பக்தி, மந்திரம், குண்டலினி மற்றும் லய.... ஒவ்ஒருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு தனித்தன்மையான ஈடுபாடும் உண்டு.

அவரவர் விரும்பும் உண்மையை மையமாக கொண்டு தின வாழ்க்கையில் ஒவ்வொரு நபரும் எந்த யோகம் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்  என்பதை கண்டுபிடிக்க வேண்டும் பிறகு அந்த யோகா பிரிவை பின்பற்ற வேண்டும் . இன்று ஹத யோகத்தில் ஆசனம், பிராணாயாமம், முத்ரா, பந்தமுறை போன்ற பயிற்சிகள் உள்ளன.

Ref:- பதஞ்சலி யோகம், வானதி பதிப்பகம்.




 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

3 Types Vayu Mudra | வாயுவை (காற்றை) சமன்படுத்தும், குறைக்கும்,அதிகரிக்கும் 3 வகை வாயு முத்திரை செய்வது எப்படி?